25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியா 'நம்பர்-63' உலக கால்பந்து தரவரிசையில் …
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா 'நம்பர்-63' உலக கால்பந்து தரவரிசையில் …

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும்பெண்கள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி 70வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் மங்கோலியா (13-0), திமோர் -லெஸ்தே (4-0), ஈராக் (5-0), தாய்லாந்து(2/1) அணிகளை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக தகுதிச்சுற்றின் மூலம் ஆசிய கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் தர வரிசையிலும் முன்னேற்றம் கண்டது இந்தியா. 

 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் 'நம்பர்-1' 

'யூரோ' கோப்பைகால்பந்து தொடரில்சுவிட்சர்லாந்தில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த நடப்பு உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, முதலிடத்துக்கு முன்னேறியது. அமெரிக்க அணி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.தொடர்ந்து 2வது முறையாக 'யூரோ' கோப்பை வென்ற இங்கிலாந்து,4வது இடத்துக்கு முன்னேறியது. சுவீடன் அணி 'நம்பர்-3' இடத்தை கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News